Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

முடிவுக்கு வந்தது சர்கார் விவகாரம் ; சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் !!

Currently online
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. 

இந் நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பனர்களை கிழித்தனர். 

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது. 

இதனையடுத்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்திருந்தது. 

இந் நிலையில், மறு தணிக்கை செய்து சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி மீண்டும் திரையிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் சர்கார் பட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

மறு தணிக்கை சர்கார் படம் மாலை முதல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.