Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 03, 2018

பெரிதாக ஒன்றுமில்லை.........!!!!!!!! அனோத் ஆதித்யன்

Currently online
முதலில் 
கண்கள் தான் பேசியது

பின்பு 
இதயங்கள் ஏதோ ஓர் மொழியில் 
உரையாடியது

உனக்கு இருபத்தி இரண்டு
எனக்கு இருபத்தைந்து

காதலை யார் சொல்வதென்பது 
மிகப் பெரும் பிடிவாதமாக இருந்தது

இதுவரை 
நானும் சொல்லவில்லை 
நீயும் சொல்லவில்லை

நாள் பார்த்தார்கள் 
உற்றார் உறவினர்கள் 
நண்பர்கள் ஊரார்கள் 
எல்லோரும் சங்கமிக்க

கெட்டி மேளம் கொட்ட 
மந்திரங்கள் நா துதிக்க

மிருதுவான செந்நிற புடவையில் 
ஆனந்தம் ததும்பிட தலை குனிந்து
என் அருகில் நீ இருந்தாய்

உன் 
அப்பனும் அம்மையும் 
என் 
அப்பனும் அம்மையும் 
சொந்தங்கள் அனைவரும் 
சேர்ந்து
அர்ச்சதை தூவி வாழ்த்துக் கூற

மஞ்சள் தாலி 
உன் கழுத்தில் கட்டி 
என் மனவாட்டி ஆக்கினேன்

ஆனால் 
இன்னும் நாம் காதலை செல்லவில்லை

முதலிரவில்

நீ கொண்ட வெட்கத்தை விட 
நான் கொண்ட வெட்கம் தான் அதிகம்

பலமுறை அந்த நிகழ்வை
என்னிடம் சொல்லி நீ சிரித்தாய்

ஒரு 
பெண் குழந்தை உன்னைப் போல்

மூன்று வருடம் கழித்து

ஒரு 
ஆண் குழந்தை என்னைப் போல்

வருடங்கள் உருண்டோடின

இப்போது 
உனக்கு என்பத்தைந்து 
எனக்கு என்பத்தெட்டு

நீ என்னிடம் ஓர் நாள் கூறினாய்

"டேய் நா சாகும் போது 
என்ன இருக்கமா கட்டி புடிச்சிகோ 
ஊ மார்புல சாஞ்சி 
ஊ உடம்பு சூட்ட உணர்ந்துகிட்டே 
உன்ன கட்டி புடிச்சி சாகனுண்டா"

என்று

இன்று 
அப்படி ஒரு தருணத்தில் தான் 
நான் இருக்கிறேன்

உன்னை இருக அணைத்து 
கட்டிக் கொண்டிருக்கிறேன்

இன்னும் சில நிமிடங்களில் 
நீ எனை பிரிவாய் என நான் அறிவேன்

உனக்கொன்று தெரியவில்லை
நீ இல்லாது நான் எப்படி வாழ்வேன் 
இவ் உலகில்

நீ சொன்னால் போல்

உன்னை கட்டிக் கொண்டு 
உன் தேக சூட்டை நானும் உணர்ந்து
சாக வேண்டும் என்பது தான்
என் ஆசையும்

இரு நானும் வருகிறேன் 
சேர்ந்தே செல்வோம்

இப்போது கூட காதலை 
நீயும் சொல்ல வில்லை 
நானும் சொல்ல வில்லை

என் மரியாதைக்குரிய மனைவியே

பெரிதாக ஒன்றுமில்லை

தோல் சுருங்கி 
நடை தளர்ந்து தல்லாடும் போதும் 
உன்னோடு நான் இருக்க வேண்டும்
இறந்து போனாலும் உன்னோடு
நானும் இறக்க வேண்டும் 
அவ்வளவு தான்

         நன்றி 
அனோத் ஆதித்யன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.