Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

யார் நினைத்தாலும் தற்போதைய அரசாங்கத்தை பிரிக்க முடியாது !!

Currently online
''மக்கள் மகிமை'' கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்து மேடையில் அமர்ந்தனர்.

இந்த கூட்டம் மற்றும் பேரணி பாராளுமன்றத்திற்கு செல்லும் நுழைவுப் பாதைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முதலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு உரையாற்றிய  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது ;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்கால நலனுக்காக கடமையாற்றப் போவதாகவும், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். 

பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழிலும் உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.