Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

எனது மரணக் குறிப்பு.........!!!!!! த.யசுதன்

Currently online
என்றோ ஒரு நள்ளிரவில் 
நான் மரணித்திருக்கக்கூடும்
வாடகைக்கு வாங்கி வந்த 
என் உயிர் 
அன்று காலாவதியாயிருக்கும்

கவலைப்படாதீர்கள்

அறிமுகமாகாத ஒருவரால்
என் மரணச்செய்தி உங்கள் 
செவிகளைச் சென்றடையும்

அப்பொழுது நீங்கள்.. என் மரணம் 
இயற்கையா? செயற்கையா?
என்று ஆராயக் கூடும்

ஆராய்ச்சி தீர்வதற்குள் என்னுடலை
ஈக்கள் பங்குபோட்டிருக்கும்

வேண்டாம் நீங்கள் எனக்காக கண்ணீர் விடுவதை
நான் விரும்பவில்லை

அது உங்கள் கண்ணீர் அது உமக்கே
உதவட்டும்... என் பிணத்தினை 
அதனால் கழுவி பயனில்லை...

நீங்கள் விரும்பினால் நான் 
படுத்திருந்த பாயிலிருந்து எடுத்து 
என்னை நிலத்தில் வீசி 
பாய்க்குச் சுதந்திரம் வாங்கித் தாருங்கள்....

நான் படித்து முடிக்காத புத்தகங்களை 
எனக்காக நீங்கள் படித்து முடியுங்கள்...

எத்தனை முறைதான் மண்மீது வாழ்வது
 மண்ணுள்ளும் வாழவேண்டாமா..???

உலகென்ற உலையில் 
வேகாத உயிருண்டா..??

தயவு செய்து என் பிணத்தோடு 
கைக்குட்டையையும் பேனாவையும் 
வைத்து புதைத்து விடுங்கள்..

அங்கு சென்றும் என் கண்ணீர்
நிற்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது.. 
அதற்காகவே அந்தக் கைக்குட்டை...

சில துரோகிகளுக்கு நான் 
சவப்பெட்டியில் வாழ்த்துரை எழுத விரும்புகிறேன்.... 
அதற்காகவே அந்தப் பேனா...

உலகம் புரியா வயதில் நான்
உலகைப் புரட்ட எத்தனித்தது
எனது குற்றமே??

   நன்றி 
த.யசுதன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.