Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

Currently online
சபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென குறிப்பிட்டு சபாநாயகருக்கு எதிராக தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தினர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஏற்றுக்கொண்டு அறிக்கையொற்றை விடுத்ததன் மூலம் சபாநாயகர் தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதன்மூலம் இலஞ்ச, ஊழல் விசாரணை சட்டத்தில் 70ஆவது ஷரத்தை அவர் மீறி செயற்பட்டுள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீடாதிபதி கலாநிதி ராஜா குணரட்ண இது தொடர்பில் நேற்று கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது ,

எவரேனும் அரச அதிகாரியொருவர் தமது பதவிக்குரிய அதிகாரத்தை உபயோகித்து ஒரு நபருக்கு ஏதாவது இலாபம் பெறும் வகையில் செயற்படுவாராயின் அது தமது பதவியை ஊழலுக்கு உட்படுத்துவதாக இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 70 ஷரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றமொன்றுக்காக ஆகக் குறைந்தது 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் குற்றங்கள் தொடர்பான 2ஆவது ஷரத்துக்கு இணங்க பாராளுமன்றத்தில் சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் எனவுள்ளது. ஆனால் சபாநாயகர் அதனை மீறிச் செயற்பட்டுள்ளார். 

இதற்கிணங்க இலஞ்ச, ஊழல் விசாரணைச் சட்டத்தின் 70 ஆவது ஷரத்தின் கீ்ழ் சபாநாயகர் தமது பதவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றத்துக்கு ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.