Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

கண்ணீரின் மாதம்...........!!!!!! முனைக்காடான் குபேந்திரன்

Currently online
கறுத்த கனவில் பரந்த வெளியில்
ரட்சத்திரம் போன்று
ஏதோ மின்னி மின்னி
மாயமாகுவதை பார்க்க முடிகிறது.!

அதுதான் உயிர் குடிக்கும்
காலன் என்று பின்னர்தான்
தெரிய வந்தது.!

யாரோ பலபேரின்
உயிர்த்துறப்புக்களின்
பெயரை சிலருக்குள்
பேசிக்கொண்டு ஓயாது
போராடிக்கொண்டு இருந்தார்கள்.!

ஆங்காங்கே
தீப்பற்றும் குடிசைகள் போன்று
விண்ணை தொட்டபடி தீ
பற்றி எறிகிறது.!

மன வைராக்கியத்துடன்
கொண்ட கொள்கையில்
எஞ்சியவர்கள்
அவேசத்துடன் போரிட்டு
எதிரிகளை புறமுதுகிட்டு
ஓட வைப்பதை காணமுடிகிறது.!

மெல்ல மெல்ல
என் கனவு
ஆதவன் கண்விழிக்கும்
நேரத்தை தட்டி
எழுப்புகிறது.!

இறந்தவர்களின் உடலை
சேலை உடுத்திய பெண்கள்
கட்டிப்பிடித்து கதறி அழுவது
என் உடலை வெட்டி வெட்டி
எறிவது போன்று நெஞ்சை கிழித்தது.!

கொடிய காற்றில்
உதிர்ந்து விழுந்த
மாம்பிஞ்சுகள் போல்
கை , கால் , தலை , சிதறி
உடல்கள் சிதறிக்கிடந்தன.!

புனிதர்கள் ஈன்றவர் முன்னே
அழுகை மட்டும் பிரசவித்தது
கல்லறை கோயில் கட்டி
இவர்களை தெய்வமாய் வணங்கும்
நாட்களை காலம் இவ்வாறு
தரும் என்று
யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.!

ஒடுக்கப்பட்ட
இனமென்பதால் அவர்களுக்கு
மழை மட்டும் ஓயாது
அழுது கொண்டிருந்தது.!

தீடீர் என்று
விழித்தெழுகிறேன்
இது மாவீரர் மாதம் என்பதால்
மழையோடு முற்றத்தில்
என் தாயும் அழுதுகொண்டிருந்தால்.!

             நன்றி
முனைக்காடான் குபேந்திரன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.