Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் வேண்டாம் ; ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !!!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் ''ஜனநாயகத்தை பாதுகாப்போம்'' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.கருணாதாச தலைமையில் வவுனியா – ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தினசரி சந்தைக்கு முன்பாக  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந் நிலையில் இனவாத அரசு எமக்கு வேண்டாம், மக்களின் வரி எம்.பி.க்களை விலைக்கு வாங்கவா? ஜனநாயக நாட்டில் சர்வதிகாரம் வேண்டாம், விவசாயி மகன் ஜனாதிபதி ஆனார் அன்று துரோகியானார் இன்று போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் எஸ்.குமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.லரிப் மற்றும் எம்.எஸ்.அப்துல்பாரி, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.