Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

சத்து நிறைந்த கோதுமை மிளகு வெங்காய தோசை !!

Currently online
தேவையான பொருட்கள் :
கோதுமை மா – 2 கப் 
அரிசி மா – 1/2 கப் 
மிளகு – 1 டீஸ்பூன் 
சீரகம் – 1 டீஸ்பூன் 
வெங்காயம் – 1 
பச்சை மிளகாய் – 1 
கறிவேப்பிலை – சிறிது 
கொத்தமல்லி – சிறிது 
உப்பு – தேவையான அளவு 
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

மிளகை பொடித்து கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, அரிசி மா, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான கோதுமை மிளகு வெங்காய தோசை ரெடி!!!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.