Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

சர்கார் திரை விமர்சனம் !!!

Currently online
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

கதைக்களம் : மிக பெரிய நிறுவனத்தின் CEO-வாக அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த தமிழனாக வாழ்ந்து வருகிறார் தளபதி விஜய்.

தான் நினைப்பதை சாதிக்கும் கார்ப்பரேட் நாயகனாக வில்லத்தனம் கலந்த வேடத்தில் நடித்துள்ளார். இவர் இந்திய தேர்தலில் தன்னுடைய ஓட்டை பதிவு செய்வதற்காக இந்தியா வருகிறார்.

ஆனால் தன்னுடைய ஓட்டை தனக்கு முன்பாகவே வேறொரு அரசியல் கட்சியினர் பதிவு செய்துள்ளனர். பின்னர் விஜய் அதிகாரிகளுடன் எவ்வளவு போராடியும் தன்னுடைய ஓட்டை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து விஜய்க்கும் எதிர் அரசியல் அணிக்கும் இடையே என்ன நடக்கிறது? இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பது தான் சர்கார் படத்தின் கதை.

விஜய் : தளபதி நடிப்பில் வழக்கம் போல மாஸ் காட்டியுள்ளார். அரசியல் வசனங்கள் திரையரங்கை அதிர வைக்கின்றன. பன்ச் டயலாக்குகள் நம்மை பரபரப்பாக்குகிறது. விஜயின் டைலாக் டெலிவரியில் மாற்றம் செய்ய முயன்றுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் : முருகதாஸ் படம் என்றாலே பெரும்பாலும் ஹீரோவுக்கு தான் மவுசு இருக்கும். அதேபோல் தான் இந்த படத்திலும் கீர்த்தி சுரேஷிற்கு வலுவான கதாபாத்திரம் இல்லை.

வரலட்சுமி சரத்குமார் : தன்னுடைய கதாபாத்திரத்தை கட்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். முதல் பாகத்தில் இருந்தே வரலட்சுமியின் காட்சிகள் இடம் பெற்று இருந்தால் இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

ராதா ரவி : அரசியல் தலைவராக நடித்துள்ள ராதா ரவி விஜய்க்கும் இடையேயான காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கின்றனர்.

இசை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக் மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் மாஸ் காட்டியுள்ளது.

ஒரு விரல் புரட்சி ரசிகர்களுக்கு புது பாடம் புகட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாடல் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தொழில் நுட்பம் : படத்திற்கு தேசிய விருது பெற்ற கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகூட்டியுள்ளது. ஸ்ரீகர் பிரசாந்தின் கச்சிதமான எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

முருகதாஸ் : முருகதாஸின் ஸ்ட்ராங்கான கதை, திரைக்கதை, வசனம் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து சர்கார் படத்திலும் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு சிறு ஏமாற்றம் தான்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.