Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை மஹிந்தவிற்கு பிரதமர் ஆசனம் இல்லை !!

Currently online
மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவருக்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் சட்டவிரோதமானவை என பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு கடிதத்தினை வழங்கியதை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகள் நியாயமானவை என தான் கருதுவதாகவும் இதன் காரணமாக கட்சியொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.