Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

செய்தி வாசிக்கும் ரோபோ ; சீனாவில் அறிமுகம் !!

Currently online
உலகிலேயே முதன்முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திகள் வாசிக்கும் ஏஐ ரோபாக்களை சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கியுள்ளது.  
இந்த ஏஐ ரோபோக்கள், ஓடும் திரையில் நகரும் எழுத்துகளைப் படிக்கும். அந்த செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசைவையும் தத்ரூபமாக அளிக்கும். 
இவற்றை ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் தனித்தனியாக வாசிக்க இரண்டு ஏஐ ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
தேடுபொறி மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
'இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும் என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
நவ.7ஆம் திகதி சீனாவில் நடந்த உலக இணைய மாநாட்டில் இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.