Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

மஹிந்தவை பிரதமராக நியமிக்க காரணம் என்ன? ஜனாதிபதி விளக்கம் !!

Currently online
ரணிலின் செயற்பாடுகளால் அதிருப்தியைடைந்தபோதும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று கூட்டரசை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜ.தே.வின் பிரதித் தலைவர்களிடம் விடுத்த கோரிக்கையை அவர்கள் நிராகரித்ததாலேயே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று (05) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ;
பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என 8 மாதங்களுக்கு முன் கரு ஜயசூரியவிடமும் இரண்டு மாதங்களுக்கு முன் சஜித் பிரேமதாசவிடமும் கோரினேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காய் மகிந்த ராஜபக்சவையே பிரமதராக்கிவிடுவது என்ற துணிச்சலான முடிவை எடுத்தேன்.

தற்போது பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டேன்.

கடந்த தினங்களில் நாட்டிற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இல்லை ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருந்த சிலரே தீர்மானங்களை மேற்கொண்டனர்.

4 வருடங்களின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒரே மேடையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

நவம்பர் மாதம் என்பது ஆச்சிரயமூட்டும் மாதமாகும். 2014ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் தான் மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவையிலிருந்து விலகியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருடம் நவம்பர் மாதம் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறோம்.

தற்போது நாட்டுக்கு பொருத்தமான ஒரு தலைவரை பிரதமராக்கிவிட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.