Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

புனிதம் மறந்தது மனிதமே இல்லை.......!!!!!! கவிப்புயல் சரண்

Currently online
கார்த்திகை மட்டும் இங்கே
கல்லறை விழிப்பதில்லை
கந்தகப் பூக்கள் ஒன்றும்
கருவிலே பூப்பதில்லை

என்னையும் உன்னையும் போல்
எளிமையாய் வாழ்ந்தவர்கள்
எதிரிக்குப் பணியேன் என்று
எரிமலை ஆனவர்கள்

ஒவ்வொரு நாளும் அந்த
விடியலை விரும்பியோர்கள்
விடுதலை விதை விதைத்த
வீரத்தின் விளை நிலங்கள்

மண்ணுகாய் மரணம் அது
மாதவம் என்றவர்கள்
மண்ணிலே சரணம் இன்றி
மரணித்த தாரகைகள்

கல்லறை அழித்து அவர் 
மண்ணறை சிதைத்த போதும்
மனவறைக் கோவில் கட்டி
தீபங்கள் ஏற்றிக் கொள்ளும்

வல்லமை தந்த எங்கள் 
தோழமை ஒன்றே போதும்
வரிசையில் வந்து நின்று
வணங்குவோம் திரண்டு வாரும்..

         நன்றி 
கவிப்புயல் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.