Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

பிடிவாதக்காரி அவள்.........!!!!! சுஜா தவம்

Currently online


கன்னத்தில் நெளியும் ஒற்றை முடி
அப்படியே தான் இருக்கிறது.
உதட்டினில் என்றும் மாறாமல் இருக்கும் புன்னகை இப்போதும் இருக்கிறது.

வழமைக்கு மாறாக பட்டாடை உடுத்தி பொட்டிட்டு பூ இட்டு அழகாக 
இருக்கிறாள் இன்று.
சுட்டி விரல் ஒன்றில் சுற்றியுள்ள வெள்ளி கம்பி மோதிரத்தை கூட இன்னும் கழட்டவில்லை அவள் .

தாய் அழைத்தது கேட்டும் 
கேட்காதது போல் இருக்கும் 
அந்த பிடிவாதம் கூட 
அப்படியே இருக்கிறது .

ஆனால் எப்போதும் போல் இல்லாமல் 
அவள் கொலுசுகள் சத்தம் இன்றி 
துயில் கொள்கிறது.
காற்றுக்கு கூட அவள் 
கண் இமை அசையவில்லை.

தன்னை மறந்து கூட 
அவள் சுவாசிக்கவில்லை.
இப்போதும் அவள் 
அவளாக தான் இருக்கிறாள்
ஏற்றுக் கொள்ளாத காதலுக்காய் 
கல்லறை கட்டிடமாக.

ஆனாலும் அப்போது ஏற்றுக் கொள்ளாதவர்கள் இப்போது 
கொஞ்சம் மாற்றமாய் கண்ணீரோடு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 
கண்ணே மகளே குட்டிமா என்று.

மீண்டும் உயிர்த்து விட்டால் 
மீண்டும் மாறி விடலாம் இவர்கள். 
ஆனால் அவள் பிடிவாதக்காரி இனி
மாற்றலாய் உயிர்க்கப் போவதில்லை.

  நன்றி 
சுஜா தவம்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.