Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

ரௌத்திரம் பழகு.........!!!!! அன்பழகி கஜேந்திரா

Currently online
வஞ்சகம் விளைத்திடும்
மாந்தரைக் கண்டால்
அவ்விடம் நோக்கி
உமிழ்ந்திடு நெஞ்சே!

கையூட்டுக் காக்கிகளைக்
காகிதமாய் என்றெண்ணி 
கசிக்கி எறி நெஞ்சே!

கெட்டவராய்
பிறப்பெடுத்தால்
கேடில்லை நெஞ்சே! 
கெட்டவனாய்
வாழ்ந்திட்டால்
கொன்றுவிடு நெஞ்சே!

கள்ளமில்லா குழந்தைகளை
எவரேனும் மாசு செய்தால்
மார்புதனில்
மிதித்திடு நெஞ்சே!

பிஞ்சு நலம்
பேணிக் காத்து
நல்லவற்றை
இன்றே விதை நெஞ்சே!

வஞ்சகமாய் பேசி 
மாதர்களை தூற்றும் மடயர்களின் 
முகத்திரை கிழி நெஞ்சே !

ஏழைகளின் உழைப்பினை
சுரண்டித் திண்ணும்
தவளைக் கூட்டத்தை
வயிற்றை நோக்கி
மிதித்திடு நெஞ்சே!

சொல்வதெல்லாம்
சொல்லிவிட்டேன்
சரித்திரமாய்
விளங்கு பெண்ணே !

அநியாயம் எங்கு
கண்டால் நீயும்
ரௌத்திரமே பழகு பெண்ணே !

        நன்றி 
அன்பழகி கஜேந்திரா
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.