Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

''சர்கார்'' படத்துக்கு எதிராக அதிமுகவினர் வன்முறை ; ரஜினி கண்டனம் !!

Currently online
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள  சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன.

மேலும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என அமைச்சர்கள் சிலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், தமிழகம் முழுவதும் சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்கார்  படத்தின் போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை கிழித்தும், படத்தை திரையிட விடாமல் தடுத்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கர்கார் திரைப்படத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் களம் இறங்கியிருக்கிறார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.