Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 26, 2018

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Currently online
நம்மில் பலர் கொய்யா, மாங்காய் போன்ற பழங்களில் உப்பு போட்டு சுவையாக உண்பது வழக்கம். 

இது கூடுதலான சுவையையும் நம் நாக்கிற்கு மிகுந்த ருசியையும் கொடுக்கும்.

சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன.

பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுத்து, பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு பயன்படும்.

முக்கியமாக உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படும். பிரஷ்ஷான பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால், அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீங்கிவிடும்.

அதிக அமிலங்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவை வயிற்றில் அதிக அளவில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இப்பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக இருப்பதோடு, அசிட்டிக் pH 3-3.3 உள்ளது. இப்பழங்களுடன் உப்பு சேர்த்து உட்கொண்டால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சை வாசனை தெரியாது. இதனால் தான் பலரும் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள். எவ்வளவு ருசியான சாப்பாடாக இருந்தாலும், அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவை நம்மால் சாப்பிடவே முடியாது.

ஆனால் அதே வகையில் நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருந்தாலும் அதை சாப்பிடவே முடியாது. எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது.

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
நாம் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் சுவை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.

பழங்களில் இருக்கும் எண்ணற்ற நுண்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, பழங்கள்பிரஷ்ஷாக இருக்க உப்பு பயன்படுகிறது.

உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படுகிறது. எனவே பிரஷ்ஷாக இருக்கும் பழங்களை உப்பு கலந்த நீரில்ஊற வைத்தால் அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீக்கப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.