Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை !!

Currently online
புதிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, நேற்று காலியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என அவர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உலமாக்களை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.