Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 03, 2018

யாழில் ஏழு உணவகங்களுக்கு சீல் வைப்பு !!

Currently online
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுகளுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

பரிசோதனையின்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்த சுகாதார பரிசோதகர்கள் அதற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந் நிலையில் நீதிமன்றம் குறித்த வழக்கினை விசாரணைக்கு உட்படுத்தியபோது உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனை அடுத்து நீதவான், உணவக உரிமையாளர்களுக்கு தலா ஒரு இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

அத்துடன் உணவகங்களின் சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர் சுகாதார பரிசோதகர்களின் அறிக்கை நீதிமன்றுத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அதுவரை உணவகங்களுக்கு சீல் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.