Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் !!

Currently online
ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய விஜயஸ்ரீ விமலஸ்ரீ என்ற மட்டக்களப்பு  பெரியகல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த ஆசிரியர் புசல்லாவ இந்து தேசிய பாடசாலையின் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றிவரும் நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை விடுமுறையில் வீட்டிற்கு திரும்பிய இவர் நேற்று வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் நிதிப்பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்துள்ளதாக  தெரியவந்துள்ளது

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.