Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை ; ஜோதிகாவை புகழ்ந்த விதார்த் !!

Currently online
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்துள்ளார். 

வித்யா பாலன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் இது. இதில் ரேடியோ ஜோக்கியாக நடித்துள்ளார் ஜோதிகா.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விதார்த், “ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கிறார். உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. நடிக்கிறீர்களா? என்று என்னிடம் கேட்டார் தனஞ்ஜெயன். ராதாமோகன் இயக்கத்தில் நடிப்பதற்கு கனவோடு இருந்தேன்.

அதேபோல், என் அம்மாவுக்கும் மனைவிக்கும் பிடித்த நடிகை ஜோதிகா. ஆகையால், உடனே ஒப்புக் கொண்டேன்.

ஆனால், ராதாமோகன் என் கதாபாத்திரத்தைக் கூறும்போது, ஏன் நான் ஒப்புக் கொண்டேன்? என்று பயந்தேன். அந்தளவுக்கு என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

குமரவேலிடம் ராதாமோகனைப் பற்றிக் கேட்டேன். அவர் எப்படிப்பட்டவர்? கோபப்படுவாரா? அப்படியெல்லாம் கிடையாது என்றார். இருந்தும், கொஞ்சம் பயத்துடனேயே படப்பிடிப்புக்குச் சென்றேன். 

அங்கு ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்ததும் எனக்கிருந்த பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. அவருக்கு ஈடுகொடுத்து எப்படி நடிப்பது? என்று யோசித்தேன். இப்படி ஒரு நடிகையை நான் பார்த்ததேயில்லை. ஆனால், முதல் டேக்கிலேயே சரியாக வந்தது. அதேபோல், படப்பிடிப்பைத் தவிர்த்து ஜோதிகா எப்படிப் பழகுவார்? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், என்னை ‘ஜோ’ என்றே கூப்பிடுங்கள் என்று மிகவும் எளிமையாகப் பழகினார்.

இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்தேன் என்றால், அதற்கு ஜோ தான் காரணம். ஜோதிகாவுக்கும் இந்தப் படம் மிக முக்கியமான படமாக இருக்கும். அடுத்த படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டு நடனமாடியிருக்கிறேன் என விதார்த் கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.