Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

வடக்கு - கிழக்கு இணைப்பை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால் தான் ஜனாதிபதியாக ஒரு மணி நேரம் கூடப் பதவியில் இருக்கமாட்டேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்தில்  தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாரங்களை ரணில் விக்ரமசிங்க தன்போக்கில் பயன்படுத்தியதால் தான் அவரை பதவி நீக்கும் முடிவுக்கு வந்ததாகவும் 2015 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட எடுத்த முடிவை விட இது கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, வடக்கு - கிழக்கு இணைக்கப்படுவதையோ சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதைச் செய்வதானால் தனது பிணத்தின் மீதே நடக்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.