Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

பிரசவத்துக்கு சென்ற பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு !!

Currently online
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்துக்கு வந்த பெண் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 9 மணியளவில் உப்போடை பகுதியைச் சேர்ந்த அம்சவல்லி என்ற பெண் பிரசவ வலியோடு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

காலை முதல் வலியால் துடித்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரவு 8 மணிக்கு மேல்தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பிறந்த பின்னர் அதீத உதிரப்போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் அம்சவல்லி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் மருத்துவர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.