Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

கத்தரிக்காய் பிரியாணி செய்வது எப்படி??

Currently online
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய் – 1
பாஸ்மதி – 2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 6
பால்(அ)தேங்காய்ப்பால் – 3 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு 

வறுத்து பொடிக்க
ஏலக்காய் – 3
பட்டை – சிறு துண்டு
கராம்பு – 4
பிரியாணி இலை – 2

செய்முறை
வெங்காயம்-தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயை கீறவும். கத்தரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, வறுத்து பொடித்த பொடிகத்தரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பிறகு உப்பு, மஞ்சள்தூள், அரிசி, எலுமிச்சைசாறு,புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும் சுவையான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.