Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று !!

Currently online
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது.

இதனை அடுத்து இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இதுவரை 31 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 12 டெஸ்டிலும், இலங்கை அணி 8 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது .
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.