Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் 03 பேர் கைது !!

Currently online
ஆவா குழுவைச் சேர்ந்த மூன்று பேர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கொக்குவிலைச் சேர்ந்தவர்களாவர். மூவரும் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்களிடமிருந்து 7 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது அவை ஒவ்வொன்றும் 3 அடி நீளம் கொண்ட மிகவும் கூரிய வாள்கள்.

அண்மையில் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர் மூவருக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைவிட அவர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதேவேளை பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில் பின்னர் குறித்த மூன்று சந்தேகநபர்களும் இன்று மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆவா குழுவின் தலைவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்படும் மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.