Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

16 லட்சம் ரூபா பணத்தை மென்று தின்ற ஆட்டுக்கு மரண தண்டனை !!!

Currently online
மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் உள்ளது.

இக்கிராமத்தில்உள்ள விவசாயி ஒருவர் நிலம் வாங்க முடிவு செய்தார், ரொம்பவும் வறுமையான குடும்பம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க தொடங்கினார். கடைசியில் 16 லட்சம் ரூபாய் சேர்த்து விட்டார்.

இதைவைத்து 10 ஹெக்டர் நிலம் வாங்கவும் குடும்பத்துடன் சேர்ந்து பிளான் பண்ணினர். எனவே பணத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடும்பத்தில் எல்லோரும் வயலுக்கு சென்றுவிட்டார்கள். 

போகும்போது கதவை மூடாமல் திறந்து விட்டு போய்விட்டிருக்கிறார்கள்.

கதவு திறந்து இருந்ததால் அவர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு ஆடு, உள்ளுக்குள் நுழைந்து டேபிள் மேல் இருந்த பணத்தை சாப்பிட்டுவிட்டது. 

வயலிலிருந்து வீடு திரும்பியவர்கள் வந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை.

பிறகு டேபிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டின் வாயில், கொஞ்சம் பிட்டு பிட்டாக பணத்துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி நின்றார்கள். 

16 லட்சம் ரூபாயையும் ஆடு மென்று தின்றதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் ஆத்திரத்தில் அந்த ஆட்டை கொன்று குடும்பமே சமைத்து சாப்பிட்டுள்ளது.

ஆட்டுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் அவர்களால் உழைத்து சம்பாதித்த அந்த 16 லட்ச ரூபாயை மறக்கவே முடியாமல் இன்னமும் சோகத்தில் உள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.