Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 235 ரன்களில் சுருண்டது அவுஸ்திரேலியா !!

Currently online
இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், அவுஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், புஜாரா நிலைத்து நின்று 123 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, விளையாடிய அவுஸ்திரேலிய அணி ரன் குவிக்க திணறியது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். கடைசியில் 235 ரன்களுக்கு அவுஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தற்போது ஆடி வரும் இந்திய ஆணி 11 ஒவர்களில் 26 ரன்கள் எடுத்து 41 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.