Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு !

Currently online
மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 109 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது
.
அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.