Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

இன்று ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு தினம் ; அதிமுகவினர் அமைதி பேரணி !!

Currently online
ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22 ஆம் திகதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் திகதி இரவு உயிரிழந்தார். 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்துகின்றனர்.

அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெறுகிறது. 

இதில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த பேரணி முடிவடைந்தவுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அனைவரும் மரியாதை செலுத்திவிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.