Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

தாய் செய்த கொடுமை பசி தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற 3 குழந்தைகள் !!

Currently online
பசி தாங்க முடியாமல் மூன்று சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் பொத்துவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

7 வயதுடைய சிறுமி ஒருவரும், 13 மற்றும் 14 வயதுகளைடைய இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உணவு கோரியுள்ளனர்.

இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனக்கூறி மூவரும் நேற்று பிற்பகல்  பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர்.

இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்த போது அவர்களின் தந்தை வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், தாயார் கவனிக்காமல் கைவிட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

தாயாருக்கு வேறு நபர் உணவு வழங்குவதாகவும், தாயார் தங்களுக்கு உணவை வழங்குவதில்லை எனவும் சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாயாரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.