Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு கொடுப்பனவு !!

Currently online
தமிழர்களின் தொகையில் காணப்படும் வீழ்ச்சியை கருத்தில்கொண்டும், எதிர்காலத்தில் தமிழர்களின் செறிவினை அதிகரிக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் ஏகமனதான ஆதரவு வழங்கியதுடன் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கும் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இவ் விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கூறுகையில், மாநகரசபை இதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதுடன், புலம்பெயர் உறவுகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.