Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

ஜப்பானில் விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானங்கள் ; 6 பேர் மாயம் !!

Currently online
ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி-130 டேங்கர் ஆகிய இரண்டு விமானங்களும் விபத்துக்குள்ளாகின.

ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில் அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. 

தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து சி-130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் ஜப்பான் கடற்கரை பகுதிக்கு எரிபொருள் நிரப்ப சென்றுவிட்டு திரும்பின. 

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானங்கள் விபத்துக்குள்ளாகின. இதையடுத்து கடலில் நீந்திய ஒரு விமானியை அங்கிருந்த ஜப்பான் கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர். 

மற்ற 6 வீரர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து ஜப்பான் கடற்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.