Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, December 04, 2018

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு ; 7 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை !!!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகத் தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான 7 பேர் கொண்ட பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்பினரால் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.