Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

திடீரென வந்த புகையிரதம் ; மயிரிழையில் உயிர் தப்பிய நபர் !! (வீடியோ இணைப்பு)

Currently online
நெதர்லாந்தில், ரயில்வே கடவையை வேகமாக கடந்த நபர் ஒருவர் கடைசி நொடியில் உயிர் தப்பிய சம்பவம் வைரலாகி உள்ளது. 

இந்த சம்பவம் 5 நாட்களுக்கு முன்  நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இப்போதுதான் வெளியாகி வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் இருந்த நபர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வரும் போது ரயில் வந்துள்ளது. ரயில் அந்த பகுதியை கடக்கும் வரை காத்திருந்தார். 


பின்னர் ரயில் சென்றவுடன் வேகமாக சைக்கிளை எடுத்தவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால் இந்த ரயிலுக்கு எதிர்புறத்தில் மற்றைய தண்டவாளத்தில் வேறு ஒரு ரயில் வந்துள்ளது. 

இன்னொரு ரயிலை கவனிக்காத அவர் வேகமாக அந்த தண்டவாளத்தில் ஓடினார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த ரயில் வந்துவிட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக தண்டவாளத்தை கடந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த வீடியோ இப்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.