Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

உலக எய்ட்ஸ் தினம் இன்று !!

Currently online
உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. 

இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது. 

இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிசம்பர் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

முதன் முதலில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

எய்ட்ஸ் நோய் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி முழுவதுமாக பலமிழக்க செய்வதால் அதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. 

ஆனால் முழுமையான தீர்வுதான் கண்டுபிடிக்கப்பட வில்லையே தவிர, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகாலம் மருந்துகளின் உதவியால் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழியினை நவீன அறிவியல் கொடுத்துள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்திலேயே எய்ட்ஸின் கிளைநோய்களான காசநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரிக்கிறது.

உலகம் முழுவதும் இதுவரை 35 மில்லியன் பேரைக் கொன்றுள்ள இந்த கொடிய நோய்க்கெதிராக மனித இனம் தனது முழுமூச்சோடுப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.