Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

வலிகளின் பிரதி..........!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
மனமென்னும் சிப்பிக்குள்ளே
முத்துப்போல் சேமித்து வைத்தேன்
நித்தம் நீ தந்த காதல் நினைவுகளை!!

முத்துக்களால் ஒளியாகும்
என் வாழ்க்கை என நம்பியிருந்தேன்
இன்றோ சேர்த்து வைத்த நினைவுகளே
சேதப்படுத்திப் போனதடி!!

கண்கள் கண்ட பாவத்திற்கும்
இதயம் சுமந்த துரோகத்திற்கும்
வலிகளையே சுமந்து தினம்
கண்ணீருடன் கரைகிறதே!!

காதலில் விழ வைத்து
கண்ணீருடன் கரைய வைத்து
இரவுகளில் எரிய வைக்கும் 
என்னவளே!!

நெடுந்தூரம் விரைகயிலே
கோடி முத்தம் நீ தந்து - என்னை
கொள்ளையடித்துப் போனாயே
அதுவுமா நினைவில்லை!!

தன்னந் தனிமையிலே 
உன் காதருகே நான் சொன்ன
கவிதைகள் எல்லாம் கண்ணீருடன் எரிகிறதே
எதுவுமா நினைவில்லை!!

நீ நின்ற போது
பனி சொரிந்த பட்ட மரம்
இந்நாட்களில் நீங்கியதால்
எரிமலையாய்க் காய்கிறதே!!

என் வாழ்வின் ஒருபாதி நீயென்று 
எடுத்துரைத்த எனக்கே
மறுபாதி வலியென்று சொல்லாமல்ப் போனவளே!!

உன்னினைவுகளின் வேதனையில்
தினம் துடித்தது போதுமடி
இனியேனும் ஒருவேளை 
நிம்மதியாய் நானுறங்க
எடுத்துக்கொள் என்னுயிரை!!!

           நன்றி 
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.