Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

யாழ்.அச்சுவேலி பகுதியில் விருந்திற்கு சென்ற நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் !!

Currently online
அயல் வீட்டிற்கு விருந்திற்கு சென்றவரை நபர் ஒருவர் வாளால் வெட்டிய சம்பவம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி மகிழடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிற்கு நேற்று(2) விருந்திற்கு சென்றிருந்த ஒருவரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார்.

இந்த நிலையில் வாள் வெட்டிற்கு இலக்கான நபரை அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைதுசெய்த அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் வாள்வெட்டுக்கு இலக்கான நபருக்கும் கைதுசெய்யப்பட்ட நபருக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட பகையே குறித்த வாள் வெட்டுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.