Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

தெய்வம் தந்த தேவதை.........!!!!!!!!! எஸ்.பி.லக்குனா

Currently online
ராணி வந்தாள் மண் குடிசை தேடி
ராகம் இசைத்தாள் பாடலொன்று பாடி
எந்தன் மனதில் உந்தன் நினைவு
ஏங்கித் தவிக்குது எந்தன் மனது

ஏழை என் வீட்டில்
ஏணை இல்லை என்று
ஏலனம் பேசினர்
என் மனம் நோக

இறைவன் பார்வை என்மேல் மோத
குழந்தை வாசம் என்னில் வீச
சுமைகள் கூடி சுகந்தம் பேச
தலைகால் புரியாது மகிழ்ச்சி கூட

கருவிலே என் குழந்தை
காலால் எட்டி உதைக்க
என் கணவனின் காதிலும்
சுட்டி மெல்ல துடிக்க

கருவிலே இருப்பவள்
கனவிலே வந்தாள்
குறும்புத் தனம் செய்து
கதைகள் பல பேசினாள்

தனிமையை விரும்பினாள்
தனியே என்னை அழைத்தாள்
புன்னகை வீசி வீசி
என் கண்களில் பூத்தாள்

முத்தம் பதித்தாள்
நித்தம் பொழிந்தாள்
அன்பில் லயிக்க - எனக்கோ
மூவுலகை படைத்தாள்

பத்து மாத முடிவிலே
தங்கம் போல ஜொலித்தாள்
என் மனசு நிறையவே
தாய்மை என்னை ஆக்கினாள்

வானமழை பன்னீர் தூவ
பூக்கள் கூடி வாழ்த்துப் பாட
ஏழை என் வீட்டிலே
தெய்வம் வந்தது தேவதை வடிவிலே.

       நன்றி 
 வட்டக்கச்சி
 எஸ்.பி.லக்குனா.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.