
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மறுத்து வரும், ஜனாதிபதிக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்காகவே இப்பாரிய பேரணியை நடத்த தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலும் இருந்து ஒரு இலட்சம் பேரை கொழும்பிற்கு கொண்டுவந்து மூன்று நாட்களுக்கு போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் வதிவிடம், செயலகம் என்பனவற்றை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.