Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

ரணிலுக்கு ஆதரவளிப்பது ஏன்? றிசாட் விளக்கம் !!

Currently online
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது எமது நோக்கமல்ல மாறாக ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதே தமது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்ற றிசாட் பதியூதீன் பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், 
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க என்ற தனிப்பட்ட நபர் மீது எமக்கு ஆர்வமில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும், ஐ.தே.கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.

ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய ஒரே கட்சியாக ஐ.தே.க. காணப்படுகின்ற நிலையிலேயே நாம் அதற்கு ஆதரவளித்து வருகின்றோம்.

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை அரசியலமைப்பு மீறல் என்பது தெளிவாகவுள்ளது. இந்நிலையிலேயே, நாம் ரணிலுக்கு ஆதரவளித்து வருகிறோம் என  றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.