Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

விஸ்வாசம் படத்தை கைப்பற்றியது சன் தொலைக்காட்சி !!

Currently online

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள
விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தல அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 4ஆவது படம் விஸ்வாசம். 

இதில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு போட்டியாக தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட, லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன. 
இந் நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபலமான சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக, வீரம் மற்றும் விவேகம் படத்தின் உரிமையையும் சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும், வெளியீட்டிற்கு 3 வாரங்கள் உள்ள நிலையில் விஸ்வாசம் டிரைலர், விஸ்வாசம் இசை வெளியீட்டு விழா என்று தல அஜித் அடுத்தடுத்து மாஸ் காட்டவுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.