Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

தாயுமானவன் நீயடா..........!!!!! தோழி கவிதாயினி

Currently online
அந்த மூன்று நாட்களில்
அணைக்க அருவருப்பாய் ...
அழைக்க அவமானமாய் நினைக்கும் 
ஆடவர் மத்தியில்...

அச்சமின்றி கூச்சமின்றி...
அரவணைத்து எனை பார்த்து...
அத்தனையும் செய்ய துடிக்கும் - என் 
அம்மா நீயடா...

புசித்தலையும்... புணர்தலையும் ...
ரசித்தலையும்... ருசித்தலையும்...
பிறவிப்பயனாய் கருதும்
புருசன்கள் மத்தியில்...

தீண்டாமை காலத்திலும் 
திரு உருவாய்...உயிரின் கருவாய் ...
எனை சுமக்கும்
தாயுமானவன் நீயடா...

மூன்றாம் சாமத்தில் கூட
முரட்டுத்தனமாய் நடக்க முனையும்...
முத்த மழையில் திழைக்க விளையும்...
கணவன்களிற்கிடையில்...

இரத்தத்தில் குளிக்கும் என்னை
மொத்தமாய் தாங்கிடும்...
சுத்தமான எண்ணம் நிறைந்த - என் 
கனவான் நீயடா...

ஆணவத்தால் அறைந்து...
அதிகாரத்தால் புண்ணாக்கி...
வரவழைக்கும் குருதியை 
ரசித்திடும் ஆண்களுக்கிடையில் ...

சொட்டு சொட்டாய் விழுந்திடும்
மாதவிடாய் துளிகளை...
ஹைக்கூ கவிதையாய் நோக்கிடும் 
கலைஞானி நீயடா...

பெண்டிர் படும் வேதனையை...
மொழி பெயர்க்காத 
ஜப்பானிய கவிதையாய் ... 
புரியாதிருக்கும் ...
ஜென்மங்களிற்கு இடையில்...

கன்னி உலகை கண்டுணர்ந்து...
கலிகாலம் முழுக்க மனமுவந்து...
கனிவுடன் நடந்து கொள்ளும்
கடவுள் தூதன் நீயடா...

கதறல் நிறைந்த தினங்கள் யாவும்
நிசப்தமாய் கழிகிறது
உன் அன்பால் இன்று ...!

பாய்ந்தோடும் செவ்வீழ்ச்சியும்
பதமாய் பரவுகிறது...
உன் பரிவால் இன்று ..!

அக்கினி பிளம்பாய் - வலி
அடி வயிற்றை சுட்டாலென்ன.. - உன் 
ஆறுதல் வார்த்தைகள் தொடர்ந்தால்
ஆயுளிற்கும் நோ தாங்கிடுவேன்...!

         நன்றி 
தோழி கவிதாயினி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.