Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

பாலியல் தொல்லை ; புகார் கொடுக்க சென்ற பெண்ணை தீ வைத்து கொளுத்திய கொடூரம் !!

Currently online
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், பொலிஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். 

தற்போது குறித்த பெண் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சீதாபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

உத்தர பிரதேசத்தின் சீதாபூரை சேர்ந்த 28 வயதுடைய பெண், கடந்த வாரம் வெளியே செல்லும் போது ராமு மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு இளைஞர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

எனவே அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க இரண்டு முறை அந்தப் பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். 

ஆனால் இரண்டு முறையும் அந்த பெண்ணின் புகாரை பொலிசார் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.


இந் நிலையில் மூன்றாவது முறை அந்த பெண் நேற்று பொலிஸ் நிலையம் செல்லும் போது ராமு மற்றும் ராஜேஷால் தடுக்கப்பட்டு இருக்கிறார். 

வீதியில் யாருமே இல்லாத இடம் பார்த்து அந்த பெண்ணை தூக்கி சென்று மண்ணெண்ணெய் ஊற்றி அந்த பெண்ணுக்கு தீ வைத்துள்ளனர். 

அருகாமையில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் 65 சதவிகித காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். 

அந்த பெண் கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ளாத பொலிசார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராமு மற்றும் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.