
மதுரை தல்லாகுளத்தில், அம்பேத்கார் நினைவு நாளையொட்டி அங்கிருந்த அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட ஒருபோதும் விரும்பமாட்டார். நாடாளுமன்றத்துக்கு தீயை வைத்து விட்டு கம்யூனிஸ்டுகள் மீது அன்று பழியை போட்டவர்தான் ஹிட்லர்.
அது போலதான் பிரதமர் மோடியும். தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க எந்த அளவுக்கும் போகக்கூடியவர்.
இதுவரை எத்தனையோ முறை வட மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. ஆனால், இப்போதுதான் ஓட்டுக்கு பணம் என்பதை பாஜகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.