Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

கூந்தல் உதிர்வினை தடுக்கும் இயற்கை உணவு முறைகள் !!!

Currently online
கூந்தல் என்பது பெண்ணின் அழகை மெருகூட்டும் விடயங்களில் முக்கியமானதொன்றாகும். இருப்பினும்  தற்போதைய நவீனகால ஓட்டத்தில்  முறையாக கூந்தல் பராமரிப்பை  யாரும் மேற்கொள்வதில்லை. இதனாலேயே அதிகமானோர்  கூந்தல்  உதிரும் பிரச்சனைக்கு  முகம் கொடுக்கின்றனர்.

செயற்கையான முறையில் கூந்தல் பாதுகாப்பில்  கவனம் செலுத்துவதை  விட இயற்கையான உணவுகளை  எடுத்துக் கொள்வதன் மூலம்  இவ்வாறான  பிரச்சினைகளை சுலபமாகத் தீர்த்துக் கொள்ளலாம் .

பொதுவாக தலைமுடி இழப்பிற்கு மன அழுத்தம், ஹார்மோன் குறைபாடு, தவறான உணவுப் பழக்கங்கள், நோய்கள், மருந்துகள், தலை முடிச்சாயம், மரபணுக் கோளாறுகள், புகைப்பிடித்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

மேலும் சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுதல்,  தலையில் பொடுகு ஏற்படல் , தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சி பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், ரேடியோ தெரபி, கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் போதும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் ஏற்படுகின்றது.

அது மாத்திரமன்றி ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப்போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும் போன்றனவாகும்.

முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.

உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன, எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்,எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முட்டை ; முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு  அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற விட்டமினும் உள்ளது.

பீன்ஸ் ; பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் எனப் பல  வகைகள் உள்ளன. இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, விட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.

பசளிக் கீரை ; பசளிக் கீரையில் அதிகளவு  இரும்புச்சத்து, விட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது. இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

ஓட்ஸ் ; ஓட்ஸில் விட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் உள்ளன. இவை முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரத் தேவையானவையாகும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ; வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை விட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவை.  இதில் விட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளன. இவை, முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன், முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.

சூரியகாந்தி விதைகள் ; சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், விட்டமின் பி, இ, புரோட்டீன்,  இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கல்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் முடி இழப்பை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

கேரட் ; விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை  பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.  தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் (சீபம்) தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நட்ஸ் & டிரைஃப்ரூட்ஸ் ; இவற்றில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்துக்கள்  உள்ளன.  குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும்.  பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு  முடி உதிர்வையும்  கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

சால்மன் மீன் ; இது அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு , பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும்  கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாமல்  வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும்.முடி உதிர்வதை தடுக்கிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.