Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

மஹிந்த முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் !!

Currently online
ராஜபக்ஷ விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி, ஜனாதிபதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்க்ஷ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ;
மகிந்தவின் சட்டவாளராக இருந்த போது, எனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார். பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இப்போது நாட்டில், பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு மிகவும், மோசமான உறுதியற்ற நிலையில் இருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியே இப்போது, மிகவும், சரியான முடிவை எடுக்க வேண்டும். 

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசியலமைப்பில் வழியில்லை. ஆனால், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு சட்ட வழிமுறை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.