Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

கமல் அப்பாவுக்கு நன்றி ; பிக்பாஸ் சுஜா வருணி நெகிழ்ச்சி !!

Currently online

புதுமணத் தம்பதிகளான 'பிக் பாஸ்' சுஜா - சிவகுமார் தம்பதிக்கு கமல் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இதனை சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுஜா - சிவகுமார் திருமணம் நவம்பர் மாதம்  சென்னையில் நடைபெற்றது. திருமணத்துக்குப் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஆனால், கஜா புயல் சுற்றுப் பயணத்தில் இருந்ததால் கமல் இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் புதுமணத் தம்பதிகளுக்கு கமல் பிரியாணி விருந்து வைத்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, ‘என் அப்பாவை அழைத்து அவருக்கு சாப்பாடு போடணும். அதான் என் ஆசை. அது நிறைவேறுமா தெரியலை’ என்று சொல்லிவிட்டு சுஜா அழுதது நினைவிருக்கலாம். அப்போது கமல், ‘பாருங்க… வரலேன்னா, அப்பா ஸ்தானத்துல நான் வரேன், சாப்பிடுறதுக்கு’ என்று சொல்ல, அழுதுவிட்டார் சுஜா.

கமல் அளித்த விருந்து குறித்து சுஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 
“கமல் அப்பாவுக்கு நன்றி. ஸ்ரீப்ரியா அத்தைக்கும் நன்றிகள். விரைவில் கமல் அப்பா எங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறில்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சுஜா.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.