Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

கவனிக்க மாட்டாயா.......? எஸ் பி லக்குணா

Currently online
அன்பே....என் ஆருயிரே....
உன்னை நினைத்து
கனவுகள் காண்கிறேன்
கற்பனை வானில் பறந்து
கவிதைகள் வரைகிறேன்

உன்னை மறக்கவும் முடியாது
நினைத்து வாழவும் முடியாது
நித்தம் நான் இங்கே
நரக வேதனையடைகிறேன்
காதலியே........
கவனிக்க மாட்டாயா?
என்னை
என் காதலை!

கலங்குகிறது விழிகள்
மெலிந்து போகிறது
என் உடல்
காலச் சக்கரமும் சுழலுகிறது
வயதும் ஏறுகிறது
காதலியே........
கவனிக்க மாட்டாயா.?
என்னை
என் காதலை!

உன் மௌனம் கூட
மனதை வதைக்கிறது
என் காத்திருப்பு கூட
என்னை பார்த்து
பல் இழிக்கிறது
காதலியே.......
கவனிக்க மாட்டாயா?
என்னை
என் காதலை!

எதில் தொடங்கி
எதில் முடிகிறதோ 
தெரியவில்லை உன் காதல்
ஆனால்!
மனதில் தொடங்கி
மரணத்தில் முடியும்
என் காதல்!

கல் மனம் படைத்த காதலியே........
இனியேனும்
கவனிக்க மாட்டாயா?
என்னை
என் காதலை.

         நன்றி 
   வட்டக்கச்சி
எஸ் பி லக்குணா
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.