Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

மன்னார் மனிதப் புதைகுழியில் இரும்பு கம்பியால் கட்டப்பட்ட எலும்புக்கூடு மீட்பு !!

Currently online
சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில், 112 வது நாளாக நேற்று மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது இடம்பெற்றது. 

இதன்போது இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் வித்தியாசமான மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருட்களும் மீட்க்கப்பட்டு வருகின்றது. 

மேலும் பல எலும்புக்கூடுகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 266 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 260 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.